25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை தடுக்கும் வழிகள் |
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை தடுக்கும் வழிகள் |

பல்வேறு பயிர்களில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. குறிப் பாக, மக்காச்சோளத் தில் படைப்புழு தாக்கு தல் என்பது பரவலாக காணப்படுகிறது. பெரிய அளவில் மக சூல் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

பொதுவாக மக்காச்சோள பயிரில் இலைகளுக்கு அடிப்பகுதியில் இந்த புழுவின் முட்டை குவியல்கள் காணப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதி யில் சுரண்டி பாதிப்பை உண்டாக்கும்.

எனவே மக்காச்சோளம் சாகுபடிக்குமுன் கட்டா யம் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிக் கொண்டு வரப்பட்டுவெயில், பறவைகளால் அழிக் கப்படும். விதைப்பின்போது கடைசி உழவில்உரத்துடன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண் டும். பயிரின் ஆரம்பகால வளர்ச்சி பருவத்தில் ஏக்கருக்கு 10 பறவை தாங்கிகள் வைக்கலாம்.

மேலும், 5 இனக்கவர்ச்சி பொறி கள் வைத்து ஆண் அந்துப் பூச்சி களை கவர்ந்து அழிப்பதன் மூலம் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த லாம். ஊடுபயிராக பயிறுவகை, சூரியகாந்தி பயிர்களை கட்டாயம் பயிரிட வேண்டும்.

15 நாள் பயிராக இருக்கும்போது வேப்பங் கொட்டை சாறு அல்லது வேம்பு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 முறை வயலை பரிசோதிக்க வேண்டும். அறுவடைக்கு பிறகு பயிர் கழிவுகளை அகற்றி, புழுவின் முட்டைகள் இருந்தால் அழிப்பது முக்கியம் என வேளாண் துறையினர் கூறுகிறார் கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News